சென்னை:

சென்னையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், பள்ளிகள் வழக்கம் போல செயல்படும், விடுமுறை கிடையாது என்று சென்னை மாவட்ட  ஆட்சியர்  சீதாலட்சுமி அறிவித்து உள்ளார்.

மிழகத்தில் நேற்று பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக  மழை பெய்து வருகிறது.  தலைநகர் சென்னையில் நேற்று  காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், நேற்று இரவு முதல் தற்போது வரை  தொர்ந்து மழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று பொதுமக்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே  எழுந்தது. இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சென்னையில் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என்று சென்னை  மாவட்ட ஆட்சித்தலைவர் சீதாலட்சுமி அறிவித்து உள்ளார்.