சென்னை:

மிழகத்தில் நேற்று பருவமழை தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், நேற்று முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. நேற்று இரவு முதல் விடிய விடிய தொர்ந்து மழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளது.

இதன் காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

வடகிழக்கு பருவமழை  தொடங்கியுள்ள நிலையில் முதல் நாளே சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை கிண்டி, தரமணி, சைதாப்பேட்டை, பட்டினப்பாக்கம், எழும்பூர், திருவல்லிக்கேணி, மெரினா, விமானநிலையம், புரசைவாக்கம், வியாசர்பாடி, தேனாம்பேட்டை, அண்ணாநகர், நெற்குன்றம் உள்பட அனைத்து  பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.  வியாபாசர்பாடி உள்பட சில பாலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

தமிழகம் முழுவதும் பரவலாக பருவ மழை பெய்து வரும் நிலையில், நேற்று இரவு முதல் சென்னையில் மழை பெய்து வருகிறது. தற்போது வரை மழை  பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இருந்து விரைவில் தகவல் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது