சென்னை:

ந்தை பெரியார் சிலைக்கு கீழே எழுதப்பட்டுள்ள “கடவுள் இல்லை” வாசகத்தை நீக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், அதை நீக்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதி மன்றம் அதிரடியாக தெரிவித்து உள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் கடவுள் உண்டு என கருத்து கூற உரிமை வழங்கியது போன்று, கடவுள் இல்லை என்று கருத்து கூறவும் உரிமை வழங்கி இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த தெய்வநாயகம் என்பவர், பெரியார் சிலைகளுக்கு கீழ் கடவுள் இல்லை, கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று இடம்பெற்றுள்ள வாசகங்களை அகற்ற உத்தர விட வேண்டும் என்று  வாசகம்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, இதுகுறித்து அரசு மற்றும் திராவிடர் கழகத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், தந்தை பெரியார் உயிரோடு இருந்தபோதே, தனது சிலையைத் திறந்து வைத்ததாகவும், அதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக இரு தரப்பினரும் வாதங்கள்  செய்தனர். அதைத்தொடர்ந்து, தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், மாறுபட்ட தத்துவங்கள், சிந்தனைகளை கூற அனைவருக்கும் உரிமை உண்டு என்றும், இதுபோன்ற வழக்கின்  உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டிதுடன், மனுதாரர் குறிப்பிட்ட வாசகங்களை பெரியார் கூறியதற்கான ஆதாரங்கள் உள்ளதால், அந்த வாக்கியங்களை நீக்க வேண்டிய அவசியம் இல்லை.

கடவுள் உண்டு என கருத்து கூற உரிமை உள்ளது போல,  கடவுள் இல்லை என்று கருத்து கூறவும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உரிமை வழங்கி உள்ளது என்று கூறி, மனுதாரரின் வழக்கை தள்ளுபடி செய்தனர்.