டில்லி:

ல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், வெளிநாடு செல்ல, மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், அவர் வெளிநாடு செல்ல உச்சநீதி மன்றம் நிபந்தனையின் பேரில் அனுமதி வழங்கியது. அத்துடன் ரூ.10 கோடி டெபாசிட் செய்யவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், தன்னிடம் டெபாசிட்டாக பெறப்பட்ட ரூ.10 கோடியை திருப்பி ஒப்படைக்க வேண்டும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து,  இந்த தொகை இன்னும் 3 மாதங்களுக்கு நிலையான வைப்புத் தொகையில் தொடரும் என்று கூறிய நீதிமன்றம், பணத்தை திருப்பி தர மறுத்துவிட்டது.

ஏர்செல் மேக்ஸிஸ், ஐஎன்எக்ஸ் மீடியோ போன்ற வழக்கில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரத்திடம், சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில், கடந்த  பிப்ரவரி மாதத்தில் 10-ம் தேதி முதல் 26- ம் தேதி வரையும்,  மார்ச் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையும் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்ல கார்த்தி சிதம்பரம் அனுமதி கோரியிருந்தார். அவருக்கு சிபிஐ, அமலாக்கத் துறை அனுமதி மறுத்த நிலையில்,  உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்,  ‘ரூ.10 கோடி டெபாசிட் கட்டிவிட்டு வெளிநாடு செல்லாம்’ என்றும், பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது. மேலும், வழக்குக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சட்டத்துடன் விளையாடக் கூடாது.  ஒத்துழைப்பு அளிக்காதபட்சத்தில், நாங்கள் வேறு வகையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டியது வரும்’ கண்டிப்புடன் அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.