சென்னை: தமிழ் வழியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது என  தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், தமிழ்மொழிக்கும், தமிழர்களின் நலனுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. ஏற்கனவே அரசு வேலையில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது,  தமிழை பயிற்று மொழியாக கொண்டு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு  தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை  இயக்குனர் சேதுராமன்வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை வசூலித்து வரும் 20-ம் தேதிக்கும் ஆன்லைனில் செலுத்திட வேண்டும் என அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வு எழுதும் +2 மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது.

மேலும், கண்பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள் , வாய் பேச முடியாதவர்களுக்கும் தேர்வு கட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.