ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோஸி தெரிவித்துள்ளார்.
IAEA தகவலின்படி ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாகக் கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.
இந்த தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ள நிலையில் இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 8வது நாளாக நீடித்து வருகிறது.
இந்த நிலையில் ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று IAEA தலைவர் ரஃபேல் க்ரோஸி கூறியுள்ளார்.
“இஸ்ரேல் எங்கெல்லாம் அணு உலைகளைத் தாக்குகிறதோ அங்கெல்லாம் கதிர்வீச்சுக்கான எந்த ஆதாரமும் இல்லை என்பது செயற்கைக்கோள் படங்களிலிருந்து தெளிவாகிறது” என்று க்ரோஸி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, IAEA-வின் தவறான அறிக்கையின் காரணமாகவே இஸ்ரேல் ஈரானை தாக்கியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், இஸ்ரேலுடனான போர் ஏற்கனவே தொடங்கிவிட்டதால், IAEA-வின் இந்த அறிக்கை தாமதமானது என்று ஈரான் கூறியுள்ளது.
அதேவேளையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் இந்தப் போரில் குதிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.