ஈரான் தனது புரட்சிகர காவல்படைக்கு புதிய உளவுத்துறைத் தலைவரை வியாழக்கிழமை நியமித்ததாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி மேஜர் ஜெனரல் முகமது பாக்பூர், பிரிகேடியர் ஜெனரல் மஜித் கதாமியை அதன் உளவுத்துறைப் பிரிவின் புதிய தலைவராக நியமித்ததாக இர்னா தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் இஸ்ரேலிய தாக்குதலில் ஹசன் மொஹாகேக் மற்றும் மொஹ்சென் பகேரி ஆகிய இரண்டு புரட்சிகர காவல்படை அதிகாரிகளுடன் உளவுத்துறை தலைவர் முகமது கசெமி கொல்லப்பட்ட நிலையில் அவருக்குப் பதிலாக புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

“எங்கள் தியாகி தளபதிகள் கசெமி மற்றும் மொஹாகேக் IRGC உளவுத்துறையை வழிநடத்திய ஆண்டுகளில், IRGC க்குள் உளவுத்துறையின் அனைத்து அம்சங்களிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டோம்” என்று பாக்பூர் கூறினார்.

கடந்த வாரம் ஈரானில் உள்ள அணு ஆயுத மற்றும் இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

இந்த தாக்குதலில் பல உயர் ஈரானிய அதிகாரிகளை இஸ்ரேல் கொன்றது, அதைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் எதிர் தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொல்வது குறித்து இஸ்ரேல் வெளிப்படையாகப் பேசியுள்ளது.

இந்நிலையில் IRGC தலைவராகப் பொறுப்பேற்றுள்ள பாக்பூர் இஸ்ரேலின் தாக்குதல் “நரகத்தின் வாயிலை” திறந்துள்ளதாக எச்சரித்துள்ளார்.