சண்டிகர்:

ஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக நேற்று செய்தி வெளியானது. ஆனால், அதுகுறித்து இதுவரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என பஞ்சாப் முதல்வர்  அம்ரிந்தர்சிங் விளக்கம் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என பல மாநில அரசுகள் மத்தியஅரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதற்கிடையில், நேற்று கோவா, பஞ்சாப் மாநிலங்களில் ஊரடங்கு ஏப்ரல் 30ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின. பத்திரிகை டாட் காம் இணைய இதழும் அந்த செய்தியை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், நீட்டிப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை என்று தெளிவுபடுத்தி உள்ளார்.

கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால்,  பஞ்சாப்பில்  ஊரடங்கு உத்தரவை நீட்டித்ததாக அறிக்கைகள் வெளியானது. ஆனால், சில மணி நேரத்தில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்த இதுவரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என முதல்வர் அம்ரிந்தர் சிங் மறுப்பு தெரிவித்து உள்ளார்.