சென்னை

சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் அதே விலையில் விற்கப்படுகிறது.

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.

கடந்த 354 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி உள்ளது.  இன்று சென்னையில் தொடர்ந்து 354 ஆம் நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.54 மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 94.24 எனவும் உள்ளது.