டெல்லி: கடந்த 2020ம் ஆணடு டெல்லி கலவரத்தின்போது, மத்தியஅரசின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்து, தலைப்புச் செய்தியாக இருந்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரைத்த நிலையில், அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு பார் அசோசியேஷன் கடும் கண்டனம் தெரவித்து உள்ளது.
பொதுவாக கொலிஜியம் பரிந்துரையை மத்தியஅரசின் சட்டவாரியம் ஏற்பது வழக்கமான நடைமுறை. ஆனால், சில நீதிபதிகளின் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக, அவர்களின் பதவி உயர்வு, இடமாற்றம் போன்றவற்றுக்கு மத்தியஅரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே எம் ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யும்படி மத்திய அரசு திருப்பி அனுப்பியது. தனது பரிந்துரையை மீண்டும் கொலீஜியம் வலியுறுத்தினால் அது மத்திய அரசை உறுதியாகக் கட்டுப்படுத்தும் என்ற நிலையில் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தை அப்படியே கிடப்பில் போட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதுபோல தற்போது நீதிபதி முரளிதர் விஷயத்திலும் பிரச்சினை வெடித்து உள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதி எஸ் முரளிதரின் பெயரை மத்திய அரசு இன்னும் அனுமதிக்கவில்லை. ஆனால், செப்டம்பர் 28 தேதியிட்ட தீர்மானத்தின் மூலம் கொலீஜியம் மாற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட மற்றொரு நீதிபதியின் பெயரை மத்தியஅரசு அங்கீரிகரித்து உள்ளது.
அதன்படி, ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான பங்கஜ் மித்தல், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக விரைவில் பதவியேற்கவுள்ளார். ஆனால் நீதிபதி முரளிதர் பற்றி எந்த வார்த்தையும் இல்லை.
கடந்த 2018ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கலவரத்தின்போது, 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பாஜக தலைவரின் “கலவரத்தைத் தூண்டுவேன் என மிரட்டல் வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியபோது, கலவரத்துக்கு காரமாண இந்துத்துவா மற்றும் பாஜக தலைவர்கள்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கமல் இருந்து வந்தது. அப்போது இதுதொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர், டெல்லி போலீஸ் மற்றும், காவல்துறையை கையில் வைத்திருக்கும் மத்தியஅரசை நேரடியாக கடுமையாக சாடினார். 1984-ம் ஆண்டு போன்ற மற்றொரு நிகழ்வை இந்த நாட்டில் நடக்க அனுமதிக்க முடியாது என்று காட்டமாக விமர்சித்தார். அதைத்தொடர்ந்து, கலவரத்தைத் தூண்டியதாக 8 பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. நீதிபதியின் நேரடி விமர்சனத்தால் பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதாவது டெல்லி கலவரத்தின் போது பாஜக அமைச்சர் அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா, அபய் வெமா மற்றும் கபில் மிஸ்ரா ஆகியோரின் தூண்டுதல் பேச்சுகள் தொடர்பாக காவல்துறை நடவடிக்கைக்கு நீதிபதி உத்தரவிட்ட ஒரு நாளுக்குப் பிறகு, பிப்ரவரி 2020 இல் இடமாற்றக் கடிதம் வந்தது. நீதிபதி முரளிதர் இரவோடு இரவாக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். இதற்கு டெல்லி பார் அசோசியேஷன் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், அதை மத்தியஅரசு கண்டுகொள்ளாமல் இடமாற்றம் நடந்தது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஒரு நாள் வேலைக்குப் புறக்கணித்துள்ளனர் மற்றும் சர்வதேச வழக்கறிஞர்கள் குழு இந்த பிரச்சினை குறித்து அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியது. நீதிபதியின் இடமாற்றம் வழக்கமானது என்றும், பிப்ரவரி 12 ஆம் தேதி உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்ததாகவும், வழக்கம் போல் அவரது ஒப்புதல் பெறப்பட்டதாகவும் அரசாங்கம் கூறியது.
ஆனால், டெல்லி வழக்கறிஞர் சங்கம், இத்தகைய இடமாற்றங்கள் எங்கள் உன்னத பணிக்கு தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல், பொதுவான மக்களின் நம்பிக்கையை சிதைத்து, சிதைக்க முனைகின்றன என கண்டனம் தொரிவித்தது.
இந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்ற கொலிஜியம், டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முரளிதர் உள்பட 5தலைமை நீதிபதி களை இடமாற்றம் செய்தும், 3 நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி பதவி உயர்வு வழங்கியும் மத்திய சட்ட வாரியத்துக்கு பரிந்துரை அனுப்பியது. அதில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி டாக்டர் எஸ்.முரளிதரை பரிந்துரை செய்தது. ஆனால், உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையில், டெல்லி தலைமை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முரளிதர், சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக மாற்றம் செய்ய ஒப்புதல் வழங்க மறுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யார் இந்த நீதிபதி முரளிதர்?
நீதிபதி முரளிதர் ஒரு வழக்கறிஞராகத் தொடங்கி ஏராளமான வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்றவர். குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக வாதாடி அவர்களுக்கு நியாயம் வாங்கிக் கொடுத்தவர். இந்தியாவில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய போபால் விஷவாயு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடி, அவர்களுக்கு உரிய உரிமையையும், நிவாரணத்தையும் பெற்றுத்தந்தனர்.
அதுபோல, நர்மதா நதியில் கட்டப்பட்ட அணைகளால், பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களுக்கும் சார்பான பணிகளைச் செய்து, அவர்களுக்கு உரிய நிவாரணங்களை பெற்றுக்கொடுத்தவர்.
இவர் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றதும், 1984ம் ஆண்டு இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பலர் கொல்லப்பட்டதுடன், ஏராளமான சீக்கியர்களின் உடமைகளும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த கலவரத்துக்கு முக்கிய தளகர்த்தாவாக இருந்தவர், அங்குள்ள காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் என்று கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர், சஜ்ஜன் குமாருக்க ஆயுள் தண்டனை வழக்கி உத்தரவிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதுபோல, 1987ம் ஆண்டு 42 முஸ்லீம் ஆண்கள் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஹாஷிம்புரா படுகொலைக்காக காவலர்களுக்கு தண்டனை அதிரடியாக தண்டனை வழங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அதுபோல ஒரினச்சேர்க்கை விவகாரம் தொடர்பான வழக்கில், கடந்த 2009ம் ஆண்டு ஓரினச்சேர்க்கையை முதன்முதலில் சட்டப்பூர்வமாக்கிய டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தார்.
இதைத்தொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி கலவரத்தின்போது, 34பேர் உயிரிழந்துள்ள விவகாரத்தில், மத்திய அரசை கடுமையாக சாடியதுடன், மத்திய அமைச்சர் உள்பட பலர்மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு அதிரடியாக உத்தரவிட்டதுடன், 1984ம் ஆண்டு கலவரத்தை போல மீண்டும் ஒரு கலவரம் டெல்லியில் நடைபெற ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று அதிரடியாக கூறினார்.
இந்த உத்தரவு வெளியான சில மணி நேரத்தில் கொலிஜியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி முரளிதர் பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறார் என்பது தெரியவந்தது. டெல்லி கலவரத்தில் கேள்விகளை எழுப்பிய நீதிபதி பணியிட மாற்றம் மத்திய அரசை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
“பாஜக ஆட்சியிலிருக்கும் ஆணவத்தில், இதுபோன்ற செயல்களைச் செய்கிறது”, “நீதித்துறை பாஜக கட்டுப்பாட்டில் உள்ளது” என கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாகப் பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிபிரசாத், “இந்த பணியிட மாற்றம் பிப்ரவரி 12ஆம் தேதியே முடிவுசெய்யப்பட்டது” என சால்ஜாப்பு கூறினார்.
இந்தநிலையில், அவரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய மத்தியஅரசு அனுமதி மறுத்து வருகிறது. இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நீதிபதி முரளிதர், தன்னிடம் வரும் வழக்கின் விசாரணையின்போது, வழக்கறிஞர்கள் கூறும், “மரியாதைக்கு உரிய நீதியரசர்” (your lordship) என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்த்தார். அப்படிப் பயன்படுத்தும் வழக்கறிஞர்களுக்கு நோட்டீஸும் வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியவர். மேலும், முரளிதர் பல்வேறு வழக்குகளில் அதிரடி தீர்ப்புகளை வழங்கியவர். அரசியல்வாதிகளாக இருந்தாலும் அவர்களைக் கண்டு பயப்படாமல் உரியத் தீர்ப்பு வழங்குபவர் நீதிபதி முரளிதர் என்பது குறிப்பிடத்தக்கது.
5உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாற்றம் உள்பட 8 பேரை உச்சநீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரை..