புதுடெல்லி:
குளிர்கால விடுமுறை காரணமாக இன்று முதல் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி வரை உச்ச நீதிமன்ற அமர்வுகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல், அடுத்த மாதம் 1ம் தேதி வரை உச்ச நீதிமன்றத்துக்கு குளிர்கால விடுமுறை விடப்படுகிறது. இதனால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வுகள் எதுவும் செயல்படாது. ஜன., 2 முதல் வழக்கம்போல் அமர்வுகள் செயல்படும். என்று கூறப்பட்டு உள்ளது.