சென்னை :

சுபஸ்ரீ மரணத்தைத் தொடர்ந்து பேனர்கள் வைக்க நீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், கிழக்கு கடற்கரை சாலை, பேனர்கள் இல்லாமல் கிளீன் ஆக காட்சி தருகிறது. இதே நிலை மற்ற பகுதிகளிலும் தொடருமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் பேனருக்கு எதிரான கடும் உத்தரவைத் தொடர்ந்து, மோடி, சீன அதிபர் சந்திப்புக்காக பேனர் வைக்க சென்னை உயர்நீதி மன்றத்தில் மத்திய மாநில அரசுகள் அனுமதி பெற்ற வரவேற்பு வளைவுகள் வைத்துள்ளன.

இந்த நிலையில், சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை செல்லும் ஈசிஆர் எனப்படும் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் எந்தவொரு பேனர்களோ, ஃபிளக்ஸ்களோ, வரவேற்பு வளைவுகளை வைக்கப்படாமல், சாலை மற்றும் சாலையை ஒட்டி உள்ள பகுதிகளில் சுத்தப்படுத்தப்பட்டு, மிக நேர்த்தியாகவும், கிளினாகவும் காட்சி அளிக்கின்றன.

அதுபோல, இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு காரணமாக  மாம்மல்லபுரம் முழுவதும் சாலையோர கடைகள் அகற்றப்பட்டு, அனைத்து பகுதிகளும் சுத்தப்படுத்தப்பட்டு, புதிய சாலைகள் மற்றும் பல சாலைகள் செப்பனிடபபட்டும், வண்ண விளக்குகளாலும், காய்கறிகள், வாழைகளைக் கொண்டு அலங்கார தோரணங்கள் அமைத்தும் அதகளப்படுத்தி உள்ளது தமிழக அரசு.

இதுபோல ஒவ்வொரு பகுதியும் சுகாதாரத்தை பேணும் வகையில் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்…. முயற்சி செய்யுமா தமிழக அரசு….

கிளினாக காணப்படும் ஈசிஆர் சாலை – வீடியோ

https://youtu.be/BubKGsfcSyE