சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையம் கடந்த ஆட்சியில் அரசுடடை செய்யப்பட்டதை நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், இதுதொடர்பான வழக்கில் மேல்முறையீடு இல்லை என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் எனும் வீட்டை, நினை வில்லமாக மாற்றி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து ஜெ.வின் வாரிசுதாரர்களான தீபா, தீபக் தொடர்ந்த வழக்கில், வேதா நிலையத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது எனவும், மூன்று வாரத்தில் வேதா நிலையம் தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, வேதா நிலையில், தீபா, தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை எதிர்த்து அதிமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இநத வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகஅரசு சார்பில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். அப்போது, இது தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்றத்தின் இரு வெவ்வேறு அமர்வுகளின் உத்தரவுகளை ஏற்றுக்கொண்டதால் மேல்முறையீடு செய்யவில்லை என்றும், ஜெயலலிதாவக்கு ஏற்கனவே கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வேறு ஒரு நினைவிடம் எதற்கு, இரு நினைவிடங்கள் தேவையில்லை என நீதிபதி உத்தரவிட்டதால், அதை ஏற்று மேல்முறையீடு செய்யவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், ஏற்கனவே அதிமுக தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில், மீண்டும் அதே பிரச்னை தொடர்பாக அதிமுக வழக்கு தொடர முடியாது என்றும், உயர்நீதிமன்ற உத்தரவின்படி சாவி ஒப்படைக்கப்பட்டு விட்டதால் பிரச்னை முடிவுக்கு வந்து விட்டது என்றும் கூறினார்.