
டில்லி,
ஆதார் அட்டை இல்லாதவர்கள் சமூக நலத்துறையின் சலுகைகளை பெற முடியாது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் வருமான வரி செலுத்துபவர்கள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணும் சேர்க்க வேண்டும் என்ற வழக்கில் தாக்கல் செய்த பதில் மனுவில் மத்திய அரசு இந்த தகவல்களை தெரிவித்து உள்ளது.
அதன்படி, ஜூன் 30 ம் தேதிக்கு பிறகு ஆதார் எண் இல்லாவிட்டால், மத்திய அரசின் சமூக நலத் திட்டங்களின் கீழ் கிடைக்கும் சலுகைகள் ஏதும் வழங்கப்பட மாட்டாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், இதுவரை சமூக நல திட்டத்தில் ஆதார் எண்ணை இணைக்கும் வசதி இல்லாதவர்கள், தொடர்ந்து சலுகைகளை பெற முடியும். ஆனால் வசதிகள் இருந்தும் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட மாட்டாது .
மேலும், ஆதார் எண்ணை பதிவு செய்வதற்கான அவகாசத்தை ஜூன் 30 க்கு பிறகு நீட்டிக்க முடி யாது என்றும், ஏற்கனவே 95 சதவீதம் பேர் தங்களின் ஆதார் எண்ணை அரசு திட்டத்தில் பதிவு செய்து விட்டனர். அதனால் அவகாசத்தை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறி உள்ளது.
பான் கார்டு வாங்க ஆதார் கட்டாயம், வருமான வரி செலுத்த பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பவற்றிற்கு மட்டும் சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஆனால், சமூக நல திட்டங்களின் கீழ் சலுகைகளை பெற ஆதார் கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]