Skip to content
  • Thu. Jul 9th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

ஊரடங்கு காலத்தில் முழு சம்பளம்… பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

Jun 12, 2020

டெல்லி:

ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் நிறுவன முதலாளி மற்றும் ஊழியர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தவும் உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது பல தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், 5வது கட்ட ஊரடங்கு ஜூன் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக,  ஊரடங்கு காலத்தில்,  தனியார் நிறுவனங்கள்  மற்றும் மாநில அரசுகள்,  ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யாமல் முழு ஊதியத்தையும் அளிக்க வேண்டும் என அரசாணை வெளியிட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது,  முழு ஊதியம் வழங்குவதற்கான மத்திய அரசின் உத்தரவை மீறியதற்காக, நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என மத்தியஅரசுக்கு இடைக்கால தடை விதித்தனர். இதையடுத்து, தனியார் நிறுவனங்களும் மத்திய அரசும் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிறுவன முதலாளிகளுக்கு எதிராக எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்ற உத்தரவு  நீடிக்கும் என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக  மத்தியஅரசு விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும், ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் இடையே மாநில அரசு தொழிலாளர் துறைகள் சார்பில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

Post navigation

கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன? மத்தியஅரசை விளாசிய உச்சநீதிமன்றம்
6மாத இஎம்ஐ வட்டி தள்ளுபடியா? நிதிஅமைச்சகத்துக்கு உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு

Related Post

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

News தமிழ் நாடு

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

News

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

உலகம்

இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar
உலகம்

தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…

April 26, 2026 Sundar
உலகம்

மோசே மர்மத்தைத் தீர்க்க உதவும் விவிலிய காலத்து சிலை எகிப்தில் கண்டுபிடிப்பு

April 24, 2026 Sundar
இந்தியா உலகம்

ஈரானுக்கு செல்ல வேண்டாம்! இந்திய மக்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்..!

April 24, 2026 A.T.S Pandian

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer