டெல்லி:
ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் நிறுவன முதலாளி மற்றும் ஊழியர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தவும் உத்தரவிட்டு உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, முழு ஊதியம் வழங்குவதற்கான மத்திய அரசின் உத்தரவை மீறியதற்காக, நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என மத்தியஅரசுக்கு இடைக்கால தடை விதித்தனர். இதையடுத்து, தனியார் நிறுவனங்களும் மத்திய அரசும் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிறுவன முதலாளிகளுக்கு எதிராக எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்ற உத்தரவு நீடிக்கும் என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக மத்தியஅரசு விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும், ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் இடையே மாநில அரசு தொழிலாளர் துறைகள் சார்பில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.