Skip to content
  • Mon. Sep 21st, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

எல்என்சி பாய்லர் வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு…

Jul 7, 2020

நெய்வேலி:

என்எல்சியில் பாய்லர் வெடித்து தீவிபடித்த  விபத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இது தொழிலாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜூலை 1-ந்தேதி நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் திடீரென பாய்லர்  வெடித்து விபத்து ஏற்பட்டது. இநத கோர விபத்தில், அங்கு பணியாற்றிய 20க்கும் மேற்பட்டோர் சிக்கியதாக கூறப்பட்டது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே  6 தொழிலாளர்கள உயிரிழந்த நிலையில், மேலும் 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி ஒவ்வொருவருதாக மேலும் 6 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்த நிலையில்,  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு தொழிலாளி இன்று உயிரிழந்தார். இதனால் என்எல்சி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களில் 2 பேர் இளநிலை பொறியாளர்கள்,  9 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள், 2 பேர் நிரந்தர தொழிலாளர்கள். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்எல்சி நிர்வாகம் 30 லட்ச ரூபாய் பணமும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது.

Post navigation

அரியலூர் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி…
தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் காலமானார்…

Related Post

தமிழ் நாடு

வீட்டுக்கூரை சூரியசக்தி திட்டத்திற்கு தமிழக அரசு மானியம்… சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்!

தமிழ் நாடு

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

தமிழ் நாடு

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer