ஒருநாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.

இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுடன் பொதுவாக என் மனசு தங்கம் படத்திலும் விஜய் ஆண்டனியுடன் திமிறி புடிச்சவன் படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் யூ டியூபர் ஒருவர் சமீபத்தில் நிவேதா பெத்துராஜ் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ள நிவேதா பெத்துராஜ் “சமீபகாலமாக எனக்கு தாராளமாக பணம் செலவிடப்படுவதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இதைப் பற்றிப் பேசுபவர்கள், ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கும் முன், தாங்கள் பெறும் தகவல்களை மனிதாபிமானத்துடன் சரிபார்ப்பார்கள் என்று நினைத்ததால் நான் அமைதியாக இருந்தேன்.

நான் 16 வயதிலிருந்தே பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்கிறேன். எனது குடும்பம் இன்னும் துபாயில் வசிக்கிறது. நாங்கள் 20 வருடங்களுக்கும் மேலாக துபாயில் இருக்கிறோம்.

என்னைப் பற்றி இதுவரை பேசப்பட்ட எந்தத் தகவலும் உண்மை இல்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். 2002 ஆம் ஆண்டு முதல் துபாயில் வாடகை வீட்டில் வசிக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.