டெல்லி: நிதி ஆயோக் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நிதி ஆயோக் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

நாடு முழுவதும் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் நோய் பரவியிருக்கிறது. தொடர் பாதிப்பை அடுத்து, நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை 2ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் நிதி ஆயோக் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பது நேற்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து, நிதி ஆயோக் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து, அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்தனர். ஏற்கனவே விமான போக்குவரத்து அமைச்சக ஊழியர் ஒருவருக்குக் கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனால் அந்த அமைச்சக அலுவலகம் அமைந்துள்ள ராஜீவ்காந்தி பவன் மூடி சீல் வைக்கப்பட்டது. அந்த துறையின் மத்திய அமைச்சர் ஹர்தீப் புரி வேறு அலுவலகங்களில் அமர்ந்து பணியாற்றி வந்தார்

அதே நேரத்தில் ராஜீவ்காந்தி பவன் திறக்கப்பட்டது. விமான போக்குவரத்து அமைச்சகம் குறைந்த ஊழியர்களுடன் செயல்படத் தொடங்கியது.