மதுரை: 
நித்தியானந்தா ஒரு பொருட்டே இல்லை என்று 293வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீனமாக ஆதீன மடத்தில் பக்தர்களுக்கு நல்லாசிகளை வழங்கி வந்த நிலையில் மதுரை ஆதீனம் 292வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
இதையடுத்து  293வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பதவியேற்றுக் கொண்டார்.
இதற்கிடையே,  நித்தியானந்தா முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில்,  மதுரை ஆதீனத்தின் 293வது சன்னிதானமாகப் பதவியேற்றுக் கொண்டு உள்ளேன். இனிமேல் இணையம் மூலம் பக்தர்களுக்கு ஆசி வழங்க உள்ளேன். கடந்த 2012ம் ஆண்டு, ஏற்கனவே அருணகிரிநாதரால் இளைய ஆதீனமாக நான் அறிவிக்கப்பட்டுள்ளேன்.  இவ்வாறு நித்தியானந்தா கூறி உள்ளார்.
இதுகுறித்து,  293வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி  எழுப்பினர்.  இதற்குப் பதிலளித்த அவர், நித்தியானந்தா ஒரு பொருட்டே இல்லை என்றும்,  அவர் இங்கு வந்தால் கைதாகிவிடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.   தொடர்ந்து பேசிய அவர், நான்  மக்களோடு மக்களாக இருப்பேன் என்றும்,  மக்களோடு எப்போதும் தொடர்பில் இருப்பேன் என்றும் கூறினார்.