மாணவர்கள் அழைப்பிதழ் இன்றி திருமணத்துக்கு செல்லக் கூடாது : என் ஐ டி எச்சரிக்கை

Must read

குருட்சேத்திரா

ன் ஐ டி நிர்வாகம் திருமணத்துக்கு அழையாமல் செல்லும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குருட்சேத்திரா நகரில் அமைந்துள்ளது என் ஐ டி எனப்படும் தேசிய தொழில்நுட்ப பயிலகம். இங்கு பயிலும் மாணவர்கள் நகரில் நடக்கும் திருமணங்களுக்கு அழைக்காமலே சென்று உணவு உண்டு விட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இது குறித்து என் ஐ டி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்துள்ளன. மாணவர்களிடம் நிர்வாகம் பலமுறை அறிவுரைகள் கூறி உள்ளது. ஆயினும் மாணவர்கள் இந்த பழக்கத்தை விடவில்லை என கூறப்படுகிறது. அதை ஒட்டி நிர்வாகம் மாணவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

அந்த நோட்டிசில்,

நமது பயிலகத்தின் சில மாணவர்கள் நகரில் நடைபெறும் திருமணங்களுக்கு அழைப்பில்லாமல் சென்று வருவதாக புகார்கள் வந்துள்ளன.

இது போன்ற நடவடிக்கைகள் மிகவும் தவறானவை / ஒழுக்கக் கேடானவை / நடக்கக்கூடாதவை

இது போன்ற நாகரிகமற்ற நடவடிக்கைகளை செய்யும் மாணவர்கள் கடுமையாக எச்சரிக்கப்படுகிறார்கள்

இனியும் அது போல நடப்பவர்கள் மீது பயிலக விதிகளின் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்

என எச்சரிக்கப் பட்டுள்ளது.

More articles

Latest article