டில்லி:

ருப்புக்கோட்டை பேராசிரியை  நிர்மலா தேவி விவகாரம் தொடர்பான வழக்கில், அவர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு  உயர்நீதி மன்றம் மதுரை கிளை தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, கல்லூரி மாணவிகளை பண ஆசை கூறி பாலியல் தொழிலுக்கு அழைப்பு விடுத்த  அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் குறித்து சிபிஐ சிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு ஓராண்டு ஆகி வரும் நிலையில், அவருக்கு  ஜாமின் வழங்க நீதி மன்றங்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், நிர்மலா தேவி  தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையின்போது, நிர்மலாதேவி ஜாமின் கொடுக்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், நிர்மலாதேவி வழக்கில் சிபிசிஐடி விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்றும்,  நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கி வெளியே விடுவதால் ஏதேனும் பிரச்சனை உள்ளதா? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம்,  கொலை குற்றவாளிகளுக்கே ஜாமீன் வழங்கும் நிலையில் நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்காதது ஏன்? சந்தானம் விசாரணைக்குழு அமைத்தது யார் விசாரணையின் நோக்கம் என்ன? ஆடியோவில் உள்ள உயர் அதிகாரிகள் யார் யார் என்றும் அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளது.