நிர்மலாதேவி விவகாரம்: மதுரை சிறையில் முருகன்-கருப்பசாமியிடம் சந்தானம் விசாரணை

Must read

மதுரை:

ருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமியிடம் கவர்னர் அமைத்துள்ள விசாரணை  அதிகாரி சந்தானம் இன்று விசாரணை நடத்துகிறார்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் சிபிசிஐடி, அதிகாரி சந்தானம் தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அருப்புக் கோட்டை தேவாங்கல் கல்லூரி மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள் உள்பட 20க்கும் மேற்பட்டவர்களிடம்  பல கட்ட விசாரணை நடத்திய நிலையில், கடந்த வாரம் மதுரை பெண்கள் சிறைச்சாலைக்கு சென்று நிர்மலாதேவி யிடமும் 6 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், நிர்மலாதேவியுடன் இணைந்து செயல்பட்டு வந்த, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்,  அவர்களிடம் விசாரணை அதிகாரி சந்தானம் இன்று விசாரணை நடத்தினார்.

இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை  நாளையும் தொடரும் என கூறப்பட்டுள்ளது.

 

அதைத்தொடர்ந்து, வருகிற 15-ந் தேதிக்குள் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்க சந்தானம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More articles

Latest article