திருவனந்தபுரம்

பிராய்லர் கோழி மூலம் நிபா வைரஸ் பரவாது எனவும் அவ்வாறு தகவல் தெரிவிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.

கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவி வருகிறது.   இந்த வைரஸ் தாக்குதல் சுமார் 13 பேர் மரணம் அடைந்துள்ளனர்.    வவ்வால்கள் மூலமாக இந்த வைரஸ் பரவுவதாக முதலில் தகவல்கள் வெளியாகின.    இந்த வைரஸ் பரவ வவ்வால்களோ கால்நடைகளோ காரணம் இல்லை என போபால் ஆய்வு மையம் உறுதி படுத்தியது.

அதை அடுத்து வாட்ஸ்அப்,  முகநூல்  போன்ற சமூக வலை தளங்களில் நிபா வைரஸ் பிராய்லர் கோழி மூலம் பரவுவதாக செய்திகள் வெளியாகின.   இந்த செய்தி வேகமாக பரவி வருகிறது.  இதை அறிந்த காவல் துறையினர் இந்த வைரஸ் பிராய்லர் கோழிகள் மூலம் பரவாது எனவும் அவ்வாறு செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.