சென்னை: அதீத கனமழை பெய்யும் என்பதால் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களுக்கு அதிக கனமழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதி தீவிர கனமழை பெய்யக்கூடும் என்பதால் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பல நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றிலும் முடங்கி உள்ளது.

சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருவதால் ஏராளமான மின் கம்பங்களும், மரங்களும் சாய்ந்து விழுந்துள்ளன. பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இந்நிலையில்  நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், கனமழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.