சென்னை: தமிழ்நாட்டில் கோவை கார் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அவ்வப்போது என்ஐஏ சோதனைகளை நடத்தி வருகிறது. இன்றும் 3 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக பல முறை சோதனைகளை நடத்தி தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த பலரை என்ஐஏ கைது செய்துள்ள நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது கிடைத்த தகவல்களைக் கொண்டு பயங்கர வாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள ய நபர்களின் இல்லங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கக் கூடிய நபர்கள் மற்றும் விசாரணையில் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் சென்னை புறநகர் பகுதிகளில் தங்கி இருக்கக் கூடிய மூன்று நபர்களுக்கு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளன.
இவர்கள், மக்களோடு மக்களாக எந்தவித அச்சுறுத்தலும் இன்று வசித்து வருவதாகவும், அதன்மூலம் இங்கு நடைபெறும் நிகழ்வுகளை , தடை செய்யப்பட்ட அமைப்புகள் உடன் பகிர்ந்துகொண்டும் வருவதாகவும் கூறப்படுகிறது. இவர்களை மாநில காவல்துறை பாதுகாப்புடன் என்.ஐ.ஏ தனது சோதனையை நடத்தி வருவதாகவும், சோதனைக்குப் பின்னரே முழுமையான தகவல் அளிக்கப்படும் எனவும் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.