கடலூர்: நெய்வேலி அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெய்வேலி திடீர்குப்பம் பகுதியில் வசித்து வந்த தங்கராஜ் (46), சின்னதுரை (37) ஆகிய இருவரும் என்.எல்.சி நிறுவனத்தில் அவுசிக் கோர்ஸ் பிரிவில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்கள்.
சி.எஸ்.ஐ.எப். குடியிருப்பு அருகேயுள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யவதற்காக இரு தொழிலாளர்களும் தொட்டியில் இறங்கினர்.  அப்போது, தொட்டியில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கியதில் இருவரும் பலியானா்கள்.  இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே உயிரிழந்தவரின் குடும்பங்களு்ககு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
download (1)
இது குறித்து ஆதி தமிழர் கட்சி மாநில தலைவர் ஜக்கையன் பேசியதாவது:
“அரசு சார்ந்த நிறுவனங்களில் இது போன்ற சம்வங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் அனைத்துமே மூடி மறைக்கப்படுகிறது. சட்டங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் இது போன்ற சம்பவங்கள் தொடர்பாக, கடும் தண்டனை விதிக்கப்படும் என கூறுகின்றன.  ஆனால் இது போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. தவிர ஏற்கெனவே நடந்த இதுபோன்ற  சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. இனியாவது இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.