பிரேசில்: பிரபல கால்பந்தாட்ட வீரரான நெய்மர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பிரபல நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்.
உலக அளவிலான கொரோனா பாதிப்பில் பிரேசில் நாடு 2வது இடத்தில் இருந்து வருகிறது. அங்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,001,422ஆகவும், இதுவரை 123,899 பேர் உயிரிழந்தும் உள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 3,210,405 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 667,118 ஆக உள்ளது.
நெய்மர், தற்போது பி.எஸ்.ஜி. எனப்படும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் எனும் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில், அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் பி.எஸ்.ஜி. கிளப் அணி, தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது.
இதைத்தொடர்ந்து, பி.எஸ்.ஜி. கிளப் அணி வீரர்கள் அனைவருக்கும் நாளை பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.