மும்பை

டுத்த மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி சென்று விளையாட உள்ள போட்டி அட்டவணை வெளியாகி உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து நாட்டிற்கு இந்திய அணி சென்றிருந்தது.  இங்கிலாந்தில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது.

தற்போது இந்திய அணி வீரர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். அடுத்த மாதம் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று விளையாடவுள்ளது. இங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் இதற்கான போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12 முதல் 16 வரையும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 20 முதல் 24 வரையும் நடக்கிறது.    மேலும் ஒருநாள் போட்டிகள் ஜூலை 27, 29 மற்றும் ஆகஸ்ட் 01 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. பிறகு  டி20 போட்டிகள் ஆகஸ்ட் 3, 6, 8, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது

இந்த போட்டிகளில். டெஸ்ட் போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கும், ஒருநாள் போட்டிகள் இரவு 7 மணிக்கும், 20 ஓவர் போட்டிகள் இரவு 8 மணிக்கும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.