சென்னை

டுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று பகல் முதலே சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.   சென்னை நகரில் பல இடங்களில் இந்த ஒரு நாள் மழைக்கே நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  நேற்று இரவு சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியதால் 4 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன.

நேற்று இரவு முழுவதும் மழை நீர் அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.   தொடர் மழை பெய்து வருவதால் மழை நீர் தேங்கி போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பலரும் அலுவலகத்தில் இருந்து நேரத்துக்கு வீடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டதால் மக்கள் பெரிதும் துயர் அடைந்தனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம்,

“அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம்.  இந்த மழை காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை,, திருச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, மற்றும் ராமநாதபுரத்தில் பெய்யக்கூடும்”

என அறிவித்துள்ளது.