இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ள நியூஸிலாந்து அணி வீரர்களின் பட்டியல் வெளியானது.

அணியில் தேர்வாகியுள்ள வீரர்கள் குறித்த விவரங்களை அந்தந்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான வீடியோ நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

வில்லியம்சன் (கேப்டன்), டாம் லாதம் (துணை கேப்டன் / விக்கெட் கீப்பர்) டேரின் மிட்செல், டெவோன் கான்வே, க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், வில் யங், டிரெண்ட் போல்ட், டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, ஜிம்மி நீஷம், ரச்சின் ரவீந்திரன், மிட்செல் சாண்ட்னர் , இஷ் சோதி