இந்த கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில், திடீர் ஆச்சர்யங்களுக்கும் திருப்பங்களுக்கும் பஞ்சமில்லாமல் பல சம்பவங்கள் நடந்துகொண்டுள்ளன என்பதில் கிரிக்கெட் ரசிகர்கள் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாதுதான்.
அந்த ஆச்சர்யங்கள் சிலவற்றை பார்ப்போமா..!
* எப்போதுமே வலுவான அணியாக கருதப்படும் தென்னாப்பிரிக்கா, இந்த உலகக்கோப்பையில் புள்ளிப் பட்டியலில் 9வது இடம் வரை சென்றது.
* வலுவான அணியாக வலம்வந்த இந்தியா, ஆஃப்கானிஸ்தான் அணியிடம் மிகவும் திணறியே வெற்றிபெற்றது.
* தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியையும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியையும் மிரட்டிய மேற்கிந்திய தீவுகள் அணி, பின்னர் சுத்தமாக சோடைபோய், புள்ளிப் பட்டியலில் 9வது இடத்திற்கு வந்துவிட்டது.
* நியூசிலாந்தையும் இங்கிலாந்தையும் எளிதாக வென்ற பாகிஸ்தான், ஆஃப்கன் அணியை மிகவும் சிரமப்பட்டே வீழ்த்தியது.
* பலவீனமான நிலையில் இருந்த இலங்கை அணியிடம் இங்கிலாந்து தோற்றுப்போனது.
* 381 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியாவை, 333 ரன்களை பதிலுக்கு எடுத்து வங்கதேசம் மிரள வைத்தது.
* ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளிடம் முற்றாக சரணடைந்த ஆஃப்கானிஸ்தான் அணி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை எதிர்பாராமல் மிரட்டியது.
* சொந்த நாட்டில் பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய இங்கிலாந்து, புள்ளிப் பட்டியலில் ஐந்தாம் இடத்திற்கு சென்றது.
இப்படியான பல அதிரடி திருப்பங்கள் இந்த உலகக்கோப்பையில் நிகழ்ந்து வருகின்றன. இனி எஞ்சிய ஆட்டங்களில் என்னென்ன ஆச்சர்யங்கள் காத்துக் கொண்டுள்ளன என்பதைக் காண காத்திருப்போம்!