லண்டன்:

ன்று நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி காவி கலரில் ஆன புதிய ஜெர்ஸியில் களமிறங்குகிறார்கள். புதிய ஜெர்ஸி அணிந்துள்ள  இந்திய வீரர்களின் புகைப்படங்கள்  வைரலாக பரவி வருகிறது.

உலக கோப்பை லீக் தொடரில் இன்று  இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் இடையே  ஆட்டம் நடைபெற உள்ளது.  ஐசியி-யின் புதிய விதிமுறைப்படி போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளும் ஒரே நிற உடையில் களம் இறங்க கூடாது. அதனால் இன்று இங்கிலாந்துடன் மோதும் ஆட்டத்தில் இந்திய அணி தங்களது ஜெர்சியை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதையடுத்து இந்திய அணிக்கு  ஆரஞ்சு நிறம் மற்றும் கருநீலம் இணைந்து உருவாக்கப்பட்ட ஜெர்ஸி  வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஜெர்ஸி அழகாக இருப்பதாகவும், தனக்கு பிடித்துள்ளதாகவும் கேப்டன் விரோட் கோலி நேற்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்திய வீரர்கள் புதிய ஜெர்ஸி அணிந்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர்.

புதிய ஜெர்ஸியுடன் இந்திய வீரர்கள் இருக்கும் புகைப் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.