வெலிங்டன்:

ந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 ஆட்டம் வெல்லிங்டனில் இன்று நடைபெற்று வந்தது. இதில் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக, இந்திய அணி 4-0 கணக்கில் முன்னிலை வகித்து  வருகிறது.

நியூசிலாந்தின் வெங்டன் நகரில் இன்று இரு நாடுகளுக்கு இடையே 4வது டி20 தொடர் இன்று நடைபெற்றது.  ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால், இந்திய அணி களத்தில் மட்டையுடன் இறங்கியது.

முன்னதாக இந்தியஅணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி, ரோஹித் சர்மா, ஷமி, ஜடேஜாவுக்குப் பதிலாக சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள். அதுபோல நியூசிலாந்து அணியிலும்,  வில்லியம்சன், கிராண்ட்ஹோமுக்குப் பதிலாக டாம் ப்ரூஸ், டேரில் மிட்செல் ஆகியோர்  சேர்க்கப்பட்டிருந்தனர்.

ஆட்டத்தில்  தொடக்க வீரர்களாக ராகுலும் சஞ்சு சாம்சனும் களமிறங்கினார்கள். ஆனால், 2-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த சஞ்சு சாம்சன் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வீரர்கள் நிதானமாக ஆடாமல் அதிரடியாக ஆடி விக்கெட்டை பறிகொடுத்து வந்தனர். எம்கே பாண்டே 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த வந்தார்.  இறுதியில் 20 ஓவருக்கு இந்திய அணி 165 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இதையடுத்து, 166 ரன் என்ற வெற்றி இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அணி வீரர்கள் கடந்த ஆட்டங்களைப் போலவே சோபிக்க தவறினர்.  4.2வது ஓவரில், முதல் விக்கெட்டாக மார்ட்டின் குப்தில் 22 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதைத் தொடர்ந்து, 11.4வது ஓவரில் கொலின் முன்ரோ 96 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வெளியே, அடுத்தது 12.1வது 97வது ரன்னில் டாம் புருஷ் வெளியேறினார்.  அப்போது அணியின் ரன் 159ஆக  இருதந்தது. இதனால், நியூசிலாந்து அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

இருந்தாலும்  இந்திய பவுலர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 19.1 ஓவரில் 163வது ரன்னுக்கு ரோஸ் டைலர் வெளியேற அரங்கத்தில் அமைதி நிலவியது. தொடர்ந்து, 19.3 ஓவரில், 164 ரன்கள் எடுத்த நிலையில், 6வது விக்கெட்டாக டாரி மிச்சேல் வெளியேற, கடைசி பந்தில் (19.6)  ஓவரில், 165வது ரன் எடுத்த நிலையில் 7வது விக்கெட்டாக மிட்செல் சான்ட்நெர் வெளியேறினார்.

நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் 165 ரன்கள் எடுத்த நியூசிலாந்து, தோல்வியை சந்தித்து. ஏற்கனவே 3 தொடரில் இந்திய அணி வெற்றிவாகை சூடியுள்ள நிலையில், இன்றைய வெற்றியைத் தொடர்ந்து 4வது வெற்றியையும் பதிவு செய்தது.