வெலிங்டன்:

நியூசிலாந்தில் கிறிஸ்த்சர்ச் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.


கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தில் கிறிஸ்த்சர்ச் மசூதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் கொல்லப்பட்டனர்.

இது உலக அளவிலான வன்முறை என்பதற்கான ஆதாரத்தை நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டென் பிரான்சில் நடந்த கூட்டத்தில் சமர்ப்பித்தார்.

மேலும், 51 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதை தீவிரவாதிகள் ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தது குறித்தும் கூட்டத்தில் நியூசிலாந்து பிரதமர் ஆர்டென் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

பேச்சுரிமை என்ற பெயரில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது தடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்த கூட்டத்தில் ஃபேஸ்புக் நிறுவன முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், நியூசிலாந்தின் ராயல் கமிஷன் விசாரணையை தொடங்கியது. இந்த தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகளின் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி இது போன்ற வன்முறை நிகழாவண்ணம் இந்த கமிஷனின் இறுதி முடிவுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் டிசம்பர் 10-ம் தேதிக்குள் இறுதி அறிக்கையை அரசிடம் விசாரணை கமிஷன் தாக்கல் செய்யும்.