நியூயார்க் உறைபனி: மக்கள் அவதி

Must read

நியூயார்க்:

குளிர் காலத்தை தொடர்ந்து அமெரிக்கா,  கனடா நாடுகளில் பனி மழை கொட்டுகிறது.  உறைபனியால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

நியூயார்க் பகுதியிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து பனி மழை பெய்கிறது.  சாலைகளில் சுமார்  நான்கு அடி உயரம் வரை பனி கொட்டிக் கிடக்கிறது. வீடுகளின்  முன்பும்,  கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களிலும் பனி படர்ந்து கிடக்கிறது.  இதனால் வீடுகளைவிட்டு மக்கள் வெளியே வர முடியவில்லை.

கொட்டிக் கிடக்கும் பனியை அகற்றுவதில் தேசிய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கிரேட் லேக்ஸ், மின்ன கோட்டா மற்றும் நியூ ஹாம்ப்ஷிர்ஸ் மாகாணத்தில் மவுண்ட் வாஷிங்டன் ஆகிய பகுதிகளிலும் கடும் குளிர் நிலவுகிறது. இங்கு மைனஸ் 38.3 டிகிரி மற்றும் மைனஸ் 36.3 டிகிரி அளவில் தட்ப வெப்ப நிலை இருக்கிறது.

கடும் குளிருக்கு சிகாகோவில் 62 வயது முதியவரும், கன்சாசில் 4 பேரும் பலியாகி உள்ளனர்.

நியூயார்க்கை வளைத்திருக்கும் உறைபனி வீடியோ:

 

நியூயார்க் உறைபனி வீடியோ

 

More articles

Latest article