சென்னை: புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி, இன்று இரவு முதல் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டு உள்ளது. மேலும் அனைத்து மேம்பாலங்களும் மூடப்படும் என அறிவித்துள்ளது.

புத்தாண்டு பிறப்பையோட்டி, சென்னை மெரினா & எலியட் கடற்கரையில் மக்கள் கூட்டம் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஒரு பாதுகாப்பான கொண்டாட்டத்தை உறுதி செய்வதற்காக, GCTP ஆனது போக்குவரத்து மாற்றம், பார்க்கிங் ஏற்பாடுகள் மற்றும் ரேஷ் ஓட்டுதல் மற்றும் பந்தயத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கையை செயல்படுத்துகிறது.
2026 புத்தாண்டு நாளை பிறக்கிறது. புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராக உள்ளனர். குறிப்பாக, சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டும். பட்டாசு வெடித்து மக்கள் 2026 புத்தாண்டை வரவேற்பார்கள். இந்த நேரத்தல் எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். மேலும், புத்தாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட 19,000 போலீசார் பாதுகாப்பாக குவிக்கப்பட்டுள்ளனர்.
லும், சென்னையில் இன்று (ஜனவரி 31) போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை, எலியட் கடற்கரை மற்றும் பிற பொழுதுபோக்கு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சென்னை போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன நிறுத்தத்திற்கான சிரமங்களை தவிர்க்க போக்குவரத்து மாற்றங்களை செய்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து மாற்றம்
அதன்படி, கடற்கரை உட்புற சாலை டிசம்பர் 31 அன்று 7.00 மணி முதல் ஜனவரி 1ஆம் தேதி அன்று 06.00 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். கடற்கரை உட்புற சாலையில் 7 மணி முதல் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது.
மேலும் அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படும்.
காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை டிசம்பர் 31ஆம் தேதி முதல் 8.00 மணி முதல் ஜனவரி 1ஆம் தேதி முதல் 06.00 மணி வரை வாகனப் போக்குவரத்துக்காக மூடப்படும்.
அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை, தெற்கு கால்வாய் சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு மந்தவெளி, ஆர்.ஏ.புரம் 2வது மெயின் ரோடு, ஆர்.கே மட் ரோடு, லஸ் மயிலாப்பூர் வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.
டாக்டர் ஆர்.கே.சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்பட்டு ஆர்.கே. மட் சாலை, லஸ் சந்திப்பு, மந்தவெளி, தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் ஹை ரோடு மற்றும் கிரீன்வேஸ் சாலையை சென்றடையலாம்.
பாரிஸ் சந்திப்பிலிருந்து காமராஜர் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் (வடக்கு) வடக்கு கோட்டை சுவர் சாலை, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், வாலாஜா பாய்ண்ட், அண்ணாசாலை வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.
வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் அனைத்து மாநகர பேருந்துகளும் ஆ.ர்.பி.ஐ சுரங்கபாதை வடபகுதிக்கு திருப்பிவிடப்பட்டு, முத்துச்சாமி சாலை, அண்ணாசாலை, அண்ணா ரோட்டரி, கத்தீட்ரல் ரோடு, வி.எம். சாலை, லஸ் சந்திப்பு மந்தவெளி சந்திப்பு வழியாக வாலாஜா சந்திப்பை அடைவதற்கு தெற்கு கால்வாய் சாலையை சென்றடைந்து தங்கள் இலக்கை அடையலாம். அனைத்து மேம்பாலங்களும் ஜனவரி 31 அன்று 10.00 மணி முதல் ஜனவரி 1 அன்று 06.00 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் சந்திப்பிலிருந்து காமராஜர் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் (வடக்கு) வடக்கு கோட்டை சுவர் சாலை, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், வாலாஜா பாய்ண்ட், அண்ணாசாலை வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.
தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் சந்திப்பு வரையிலான முழு சாலையிலும் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்பட மாட்டாது.
கொடி மரச் சாலையில், இரவு 8 மணி முதல் வாலாஜா பாயிண்டிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
கிரீன்வேஸில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் பேருந்துகள் ஆர் கே மட் சாலையில் உள்ள “U” திருப்பத்தில் திரும்பி, திருவேங்கடம் தெரு, ஆர்கே மடம் வழியாக செல்லலாம்.
வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் அனைத்து மாநகர பேருந்துகளும் ஆ.ர்.பி.ஐ சுரங்கபாதை வடபகுதிக்கு திருப்பிவிடப்பட்டு, முத்துச்சாமி சாலை, அண்ணாசாலை, அண்ணா ரோட்டரி, கத்தீட்ரல் ரோடு, வி.எம். சாலை, லஸ் சந்திப்பு மந்தவெளி சந்திப்பு வழியாக வாலாஜா சந்திப்பை அடைவதற்கு தெற்கு கால்வாய் சாலையை சென்றடைந்து தங்கள் இலக்கை அடையலாம்.
அனைத்து மேம்பாலங்களும் ஜனவரி 31 அன்று 10.00 மணி முதல் ஜனவரி 1 அன்று 06.00 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]