சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இந்தாண்டு விபத்து உயிரிழப்பு இல்லாத புத்தாண்டாக அமைந்துள்ளது, அதற்காக போக்குவரத்து காவல்துறையினர். பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், தமிழ்நாடு முழுவதும் அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாட்டம்: சிறப்பான பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு காவல்துறை தலைவரான  டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

2023ம் ஆண்டு முடிவடைந்து 2024 ஆம் ஆண்டு பிறந்துள்ளது. முன்னதாக புத்தாண்டு தினத்தன்று பல்லாயிரக்கணக்கானோர் கடற்கரை மற்றும் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் கோவில்களில் கூடி தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக,  ஏதும் அசம்பாவிதிகள் ஏற்படாமல் இருக்கும் வகையில், காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டனர். இதுதொடர்பாக,  டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் மேற்பார்வையில் அனைத்து மாநகர கமிஷனர்கள், 4 மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள், 38 மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் 1.20 லட்சம் போலீசார்  பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

மேலும் பொதுமக்கள், கடற்கரை, கோவில்கள், சுற்றுலா தலங்கள் செல்வதற்கு எந்தவித இடையூறு மற்றும் வாகன நெரிசல் ஏற்படாதவாறு  ‘டிரோன்’ மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் போலீசாரின் சிறப்பான பணி காரணமாக சாலை விபத்துக்கள் தடுக்கப்பட்டது.

மேலும் குடித்து விட்டு வாகனம் ஒட்டினால், வாகனம் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்த நிலையில், மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களிடன் எண்ணிக்கையும் குறைந்தது. நட்சத்திர ஓட்டல்கள், ரிசாட்டுகள், பன்னை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் இரவு 1 மணியுடன் முடிக்கப்பட்டது.

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.புத்தாண்டு தினத்தில் சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை ஆகிய இடங்களில் நாளை மாலை 7 மணி முதல் 1ம் தேதி காலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு கடற்கரை ஓரங்களில் குதிரை படைகள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டன. அதனால், சென்னையில் விபத்திலாக புத்தாண்டாக விடித்நதது.

இதைத்தொடர்ந்து, டிஜிபி சங்கர் ஜிவால்,  2024 புத்தாண்டை சிறப்பாக நடத்தி முடித்த அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டு தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  , தமிழ்நாடு முழுவதும் 31ம் தேதி இரவு முதல் 1ம் தேதி காலை வரை சட்டம் ஒழுங்கு பராமரிக்கவும், சாலை விபத்துக்கள் மற்றம் இதர அசம்பாவிதங்களை தடுக்கவும் தமிழ்நாடு காவல்துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தாலும், எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நிகழாமல் மாநிலம் முழுவதும் புத்தாண்டு அமைதியான முறையில் கொண்டாடப்பட்டது. இந்த புத்தாண்டு பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட அனைத்து காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் பாராட்டுகள் . மேலும், அனைத்து காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் இந்தாண்டு (2024) விபத்து உயிரிழப்பு இல்லாத புத்தாண்டாக அமைந்ததாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளின் புள்ளிவிவரங்களை ஒப்பிட்டு, சென்னை மக்களின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்து X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.