அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் விசா நடைமுறை மாற்றம்: இந்தியர்களுக்கு பாதிப்பு

Must read

மெல்போர்ன்:

மெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் புதிய விசா நடைமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றபிறகு, விசா முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன் காரணமாக இந்தியர்கள் உள்பட வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவிலும், இந்தியர்கள் பயன்படுத்தி வரும்,  ‘457’  என்ற விசா  நடைமுறையை ஆஸ்திரேலியா அரசு  அகற்றி விட்டு,  அதற்கு பதிலாக பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்ட புதிய விசா முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.

தகுதி மற்றும் திறமையுள்ள தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ள இந்த விசா முறை இருக்கும் என்று கூறி உள்ளது. மேலும், இந்த புதிய விசா முறையில், ஆஸ்திரேலியர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

ஏற்கனவே பயன்படுத்தி வந்த  ‘457’ என்ற விசா முறை தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், அதன் காரணமாக உள்நாட்டை சேர்ந்த  ஆஸ்திரேலியர்களுக்கான வேலை வாய்ப்பும் குறைந்து வந்தாகவும் அதன் காரணமாகவே  ‘விசா முறையில் மாற்றம் செய்யப்படும்’ என, ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் அறிவித்திருந்த நிலையில், தற்போது புதிய விசா நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த புதிய விசா முறை கடந்த  18-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விசா முறையில் பல்வேறு கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ள.

அதில், ஆஸ்திரேலியாவுக்கு வேலை செய்ய வருபவர்கள், ஆங்கிலம் நன்கு பேசத் தெரிந்திருக்க  வேண்டும், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம்  இருக்க வேண்டும் என்பது உள்பட   ‘கிரிமினல் குற்றங்கள் இல்லை என்பதற்கான தடை இல்லா சான்று தேவை உள்பட  பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

மேலும், விசா பணிக்காலம், பணியின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் வெளிநாட்டை சேர்ந்வர்களுக்கு இதுவரை  ‘457’ என்ற விசா முறை வழங்கப் பட்டு வந்தது. இதில் 25 சதவீத விசாவை இந்தியர்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலிய  அரசின்  புதிய விசா  நடவடிக்கையால் அங்கு பணிபுரிய செல்லும் இந்திய தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article