தஞ்சாவூர்: அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் புதிய வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, பாஜகவினரை கைது செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதுதொடர்பாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

மதம்மாற செய்ய வலியுறுத்தியதாக பிளஸ்2 மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் அரசியலாக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தின் மாணவி பேசியது தொடர்பான அடுத்தடுத்து வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. முதலில் வந்த வீடியோவில், மாணவி கடந்த இருண்டு ஆண்டுகளாக மதம் மாற வலியுறுத்திய தாக கூறிய நிலையில், தற்போது   புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், வீடியோ எடுக்கும் நபர் ஒன்வொன்றாக கேட்பது போன்றும் அதற்கு மாணவி பதில் கூறுவதும் பதிவாகி உள்ளது. இதுதான் உண்மையான வீடியோ என்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, மாணவியை வைத்து அரசியல் செய்த பாஜகவினரை கைது செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன், மாணவியின் புதிய வீடியோ மூலம் பாஜகவின் தரம்தாழ்ந்த அரசியல் அம்பலமாகி உள்ளது. இல்லாத ஒன்றை சித்தரித்து தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்தி முயற்சி நடத்திருப்பதாக வேதனை தெரிவித்து உள்ளார்.

கம்யூனிஸ்டு கட்சி தலைவர் பாலகிருஷ்ணன்  வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதியாக உள்ள தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில், இல்த புகாரை பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் இட்டுக்கட்டி உள்ளது. பொய்ப்புகார் கூறும் பாஜகவினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மாணவியின் வீடியோவை பாஜக உடனடியாக வெளியாடாதது ஏன்? தமிழ்நாட்டில் மதரீதியாக மக்களை பிளவுப்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு, வீடியோவை வெளியிட்டு உள்ளனர் என்று தெரிவித்துஉள்ளார்.