கலை அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டிலிருந்து புதிய பாடத்திட்டம்! அமைச்சர் பொன்முடி தகவல்

Must read

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டிலிருந்து புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என உயர்கல்வித்துறை  அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரிடம், பச்சைப்பன் கல்லூரி உதவி பேராசிரியர்கள் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர்,  பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர் விவகாரத்தில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில், குழு அமைக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படும் என்றார்.

திமுக அரசு ஊழல் செய்கிறது என்ற எடப்பாடி பழனிச்சாமி கூறியது தொடர்பான கேள்விக்கு  பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, தமிழ் மக்களுக்கு யார் ஊழல் செய்கிறார்கள் என்பது தெரியும் என்று கூறினார்.

மேலும்,  தமிழ்நாட்டில் , கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், அடுத்த கல்வியாண்டில் இருந்து புதிய பாடத்திட்டம்கொண்டு வரப்படும் என்றவர், அனைத்து பல்கலைகழகங்களிலும் ஒரே மாதிரியான மொழிப்பாடம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) கொண்டு வரப்படும் என்றார். அத்துடன்,  ஆராய்ச்சி படிப்பிற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article