மக்களவை தேர்தல் 2019 : பாஜகவின் புதிய தேர்தல் கோஷம்

டில்லி

டந்து வரும் மக்களவை தேர்தல் பிரசாரத்தில் பாஜக புதிய கோஷம் ஒன்றை எழுப்ப உள்ளது.

மக்களவை தேர்தலுக்கு முன்பிருந்தே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி க்றித்து காவலனே திருடன் ஆனார் என்னும் கோஷத்தை பிரபலமாக்கினார். அதற்கு பதிலாக மோடியால் பாஜக சார்பில் நானும் காவல்காரன் தான் என்னும் கோஷம் கொண்டு வரப்பட்டது. இதுவும் டிரெண்டான போதிலும் காங்கிரஸின் கோஷம் போல் அது பிரபலமாகவில்லை,

தேர்தல் தொடங்கிய பிறகு ஃபிர் ஏக் பார் மோடி சர்கார் (மீண்டும் ஒருமுறை மோடி அரசு) என்னும் கோஷம் எழுப்பப் பட்டது. அத்துடன் மற்றொரு கோஷமான மோடி ஹை தோ மும்கின் ஹை (மோடி இருந்தால் எதுவும்முடியும்) கோஷமும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இரண்டுமே ஒரு சில எழுத்துக்களை மாற்றி எதிர்மறையா பொறு மாற்றப்பட்டது. அதாவது மீண்டும் வேண்டுமா மோடி அரசு எனவும் மோடி இருந்தால் எதுவும் முடியாது எனவும் மாற்றப்பட்டது.

தற்போது புதிய கோஷமாக காம் ருகே நா தேஷ் ஜுகே நா (பணிகள் தடைபடாம இருக்க இதே அரசு தொடரட்டும்) என்னும் கோஷம் எழுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பாஜக தலைவர் ஒருவர், “தற்போது மோடி அரசு பல நலத்திட்டங்களை தொடங்கி உள்ளது. அந்த பணிகள் மேலும் தொடர இதே அரசும் தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும்,” எனக் கூறி உள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: BJP New slogan, Lok Sabha Elections 2019
-=-