இடியுடன் கூடிய பலத்த மழை: ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசத்தில் 31 பேர் பலி

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் ஏற்பட்ட புயல் மற்றும் கடும் மழை காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்து உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை புயல் தாக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், கடநத  2  நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மின்சாரம்துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று புயல் புயல் தாக்கியது. மணிக்கு சுமார் 50 கி.மீட்டர் வேகத்திலான புயல் காற்றுடன் கனமழையும் பொழிந்தது. இதில்,  ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவை சேதமடைந்தன. இந்த புயல் மழையில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதேபோல் மத்தியபிரதேசத்தில் புயல் மழையில் சிக்கி, கடந்த 2 நாட்களில் 16 பேர் பலியாகியுள்ளனர்.  குஜராத்திலும் கடும் மழை காரணமாக   9 பேர் பலியாகி உள்ளனர்.  இதுவரை 31 பேர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு  தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.
#RajastanRainStrom

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 31 killed as rain, Gujarat, Madhya Pradesh, Rajasthan, thunderstorm hit
-=-