சென்னை:

மிழகத்தில் ரூ 84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிக்கட்டடங்களை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்த வைத்தார். அத்துடன் கு ஸ்மார்ட் அட்டை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் மொத்தம் 84 கோடியே 33 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 52 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கட்டடங்களை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

5 மாவட்டங்களில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை சார்பில் ரூ.5 கோடி செலவில் மாணவர்கள் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. அதை  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும் பல இடங்களில் ரூ 26 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புகள் மற்றும் ரூ 4 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையங்களையும் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

2019-2020ஆம் கல்வியாண்டில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 70 லட்சம் மாணாக்கர்களுக்கு 12 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாணாக்கர்களின் சுய விபரங்களை பதிவு செய்யும் வசதியுடன் திறன் அட்டைகள் (Smart Cards) தயாரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு திறன் அட்டைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் பழனிசாமி இன்று 7 மாணவ, மாணவிகளுக்கு திறன் அட்டைகளை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வின்போது, பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.