சென்னை:

ரூ.24 லட்சம் மதிப்பிலான டூகாட்டி வெளிநாட்டு இரு சக்கர வாகனத்தில் வேகமாக பயணம் செய்தபோது விபத்தில் சிக்கி, தீவிர சிகிச்சை பெற்று வந்த  தமிழக சட்டஅமைச்சர் சி.வி. சண்முகத்தின் அண்ணன் மகனின் கால், அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, அமைச்சர் சிவி சண்முகத்தின் அண்ணன் மகன் தனது 24 லட்ச ரூபாய் மதிப்புள்ள டூகாட்டி பைக்கில் அதிவேகமாக சென்றபோது விபத்தில் சிக்சி உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில்,  தற்போது அவரது ஒரு கால் அகற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக   சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகனை முதல்வர் பழனிச்சாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அமைச்சர்  சி.வி.சண்முகத்தின்  சகோதரர் சி.வி.ராதாகிருஷ்ணன்  நியூஸ் ஜெ. தலைமை பொறுப்பாளராக இருந்து வருகிறார். இவரது மகன் அர்ஜுன் (20). காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவப் படிப்பு படித்து வருகிறார். இவர் கடந்த வாரம்  பூந்தமல்லி அடுத்த மலையம்பாக்கம் மேம்பாலம் அருகே வண்டலூர்–மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வேகமாக சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், அவரது ஒரு கால் அகற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.