2023 முதல் ஐபிஎல் போட்டிகளில் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தங்கள் அணியின் 11 பேர் கொண்ட விளையாடும் வீரர்கள் குறித்து டாஸ் போட்டபின் கேப்டன்கள் அறிவிக்கலாம்.

இதற்கு முன் டாஸ் போடுவதற்கு முன் அணியின் வீரர்கள் குறித்து அறிவிக்க வேண்டும் என்று இருந்த விதியை தற்போது டாஸ் போட்டபின் அறிவித்தால் போதும் என்று மாற்றியுள்ளனர்.

ஒவ்வொரு அணியிலும் 11 விளையாடும் வீரர்கள் தவிர 4 சப்ஸ்டிடியூட் வீரர்கள் (மாற்று வீரர்கள்) இடம்பெறுவார்கள்.

ஆட்டத்தின் போக்கை பொறுத்து இந்த மாற்று வீரர்களில் ஒருவரை இம்பாக்ட் பிளேயராக களமிறக்கலாம் என்ற மற்றொரு புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கால்பந்து, கூடைப்பந்து, ரக்பி, பேஸ்பால் போன்ற விளையாட்டுகளில் உள்ளது போன்று கிரிக்கெட்டில் முதல் முறையாக இம்பாக்ட் பிளேயர் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் பேட்டிங் மற்றும் போலிங் ஏதாவது ஒன்றில் திறமையுள்ள வீரரை மாற்று வீரராக அறிவித்து விட்டு பின்னர் தங்களது தேவைக்கு ஏற்ப ஆட்டத்தின் போக்கைப் பார்த்துக் கொண்டு அந்த மாற்று வீரரை இம்பாக்ட் வீரராக களமிறக்கலாம்.

இதனால் எந்த அணிக்கு வெற்றி தோல்வி கிடைக்கும் என்பது கடைசி பந்துவரை சுவாரஸ்யமாக இருப்பதுடன் ஆட்டம் நன்றாக கல்லா கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணியின் 11 வீரர்களில் வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை 4க்கும் குறைவாக இருந்தால் மட்டுமே வெளிநாட்டு வீரர் இம்பாக்ட் வீரராக களமிறங்கலாம், இல்லையென்றால் இந்திய வீரர் மட்டுமே இம்பாக்ட் வீரராக களமிறங்க முடியும்.

கேப்டன் ஆலோசனையின் பேரில் இம்பாக்ட் வீரரை மைதானத்திற்குள் அழைக்க அம்பயர் தனது முஷ்டிகளை மடக்கி இரண்டு கைகளையும் தலைக்கு மேல் குறுக்காக உயர்த்துவார்கள். இந்த புதிய விதைமூலம் இது அம்பயர்களுக்கான புதிய குறியீடாக
இருக்கும்.