டெல்லி: லேண்ட்லைன் போன்களில் இருந்து செல்போன்களுக்கு அழைக்க புதிய கட்டுப்பாடு முறையை மத்திய அரசு அறிவித்து உள்ளது.

லேண்ட்லைன் எனப்படும் தரைவழி தொலைபேசி எண்களில் இருந்து செல்போன்களை அழைத்துப் பேசுவதற்கு, இதுவரை குறிப்பிட்ட 10 இலக்க மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது.

ஆனால், தற்போது அந்த நடைமுறையை மத்திய அரசு மாற்றி இருக்கிறது. அதன்படி லேண்ட் லைன் தொலைபேசியிலிருந்து செல்போன்களுக்குத் தொடர்புகொள்ள குறிப்பிட்ட எண்ணுக்கு முன்னாள் பூஜ்யம் சேர்க்க வேண்டும்.  2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் தேதியில் இருந்து இந்த நடைமுறை அமலாகும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.