மும்பை: சாலையில் போக்குவரத்து சிக்னலில், நேரம் வரும்வரை காத்திருக்கப் பொறுமையின்றி ஹாரன் அடிப்பவர்களை, இன்னும் அதிகநேரம் காக்கவைத்து தண்டிக்கும் வகையில், மும்பையில் ஒரு புதுவகை திட்டம் அமல்செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் பெயர் ‘த பனிஷிங் சிக்னல்’, டிராபிக் சிக்னல்களுடன், டெசிபல் மீட்டர்கள் எனப்படும் ஒலி அளவிடும் கருவிகள் பொருத்தப்படுவதுதான் இத்திட்டம்.

இதன்படி, சிக்னலில் சிவப்பு விளக்கும் அணையும் முன்பாகவே யாரேனும் ஹாரன் அடித்தால், சிக்னலில் உள்ள விநாடிகள் மேலும் அதிகமாகிவிடும். அதாவது, ஹாரன் அடிக்கும் டெசிபல் அளவு 85க்கும் மேல் சென்றால் இந்த தண்டனை.

அதாவது க்ரீன் சிக்னல் வருவதற்கு 15 விநாடிகள் இருக்கும்போது யாராவது ஹாரன் அடித்தால், அவர்கள் க்ரீன் சிக்னலுக்காக காத்திருக்க வேண்டிய நேரம் 90 விநாடிகளாக மாறிவிடும்.

இந்தப் புதிய திட்டத்தின்படி, மும்பையில் ஹாரன் அடிப்பது பெருமளவில் குறைந்துள்ளதாம். எனவே, இதை மாநிலம் மழுவதும் மற்றும் நாடு முழுவதும் விரிவாக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம்!