டில்லி:

காலியாக உள்ள தலைவர் பதவிக்கு தகுதியான நபரை தேர்ந்தெடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று டில்லியில் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில், கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்க புதிய நடைமுறையை செயல்படுத்தும்படி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நிர்வாகிகளுக்கு ஆலோசனை தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து,  ராகுல் காந்தி விலகியதைத் தொடர்ந்து, தலைவர் இல்லாத நிலையில் கட்சி தொடர்பான முடிவுகள் எடுக்க முடியாமல் கட்சி திணறி வருகிறது.

இந்த நிலையில்,  காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் அடுத்த தலைவர் யார் என்பது குறித்த விவாதிக்கப்பட்டு வருகிறது.

கூட்டத்தில் கலந்துகொண்ட ராகுல்காந்தி, தலைவர் தேர்வில் புதிய நடைமுறையைப் பின்பற்ற ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, காரியக் கமிட்டி உறுப்பினர்கள் மட்டும் கூடித் தலைவரை தேர்வு செய்யாமல் நாடாளு மன்ற உறுப்பினர்கள், கட்சியின் மற்ற அமைப்பு நிர்வாகிகள், மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசிக்க வேண்டும் எனவும் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் தேர்வு செய்யப்படுவது மேலும் தாமதமாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு மாநில காங்கிரஸ் தலைவர்களுடன், காரிய கமிட்டி குழுவினர்  புதிய தலைவர் தேர்வு தொடர்பாக விவாதிக்க உள்ளனர். அதைத்தொடர்ந்தே, புதியத் தலைவர் தேர்வு நடைபெறும் என தெரிகிறது. இதற்கு மேலும் சில நாட்கள் ஆகும் என்பதால், தற்போதைய நிலையில் கட்சித்தலைவர் தேர்வு இன்று நடைபெற வாய்ப்பில்லை என்ற கூறப்படுகிறது.