டெல்லி: வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் தமிழ்நாட்டிற்கு மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதிசனிக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது. இதன் காரணமாக ஒடிசாவில் வரும் தசரா பண்டிகை நாட்களான 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில்,   வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்தம் உருவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.  தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)தெரிவித்துள்ளது

ஒடிசா மழை  ஒரே நேரத்தில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் இரண்டு காற்றழுத்தங்கள் உருவாகியிருப்பது வானிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காற்றழுத்தம் உருவானால், தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்து குமரிக்கடல் வரை மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களில் வரும் நாட்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.